For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பொது கலந்தாய்வு எப்போது? வெளியான அறிவிப்பு!

04:18 PM Jul 14, 2024 IST | Web Editor
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பொது கலந்தாய்வு எப்போது  வெளியான அறிவிப்பு
Advertisement

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.

Advertisement

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 28 துறைகள் செயல்பட்டு வருகிறது.  இங்கு கடந்த கல்வி ஆண்டுகளில் கலந்தாய்வு இல்லாமல், அந்தந்த துறைகள் மூலமாக நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நடப்பாண்டு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளின் முதுநிலை பாடத்தில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, சமூகவியல், இதழியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், உயிர் வேதியியல், உயிர் புள்ளியியல், ஆற்றல் அறிவியல், கல்வியியல், உயிர் மருத்துவ அறிவியல், ஆற்றல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கு பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை செய்யப்படுகிறது.

இந்த பொது கலந்தாய்வு வரும் 19ம் தேதி காலை 10 மணி முதல் பெரியார் பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெறுகிறது.  இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement