For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சேலம்: லாரி, பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி 5 பேர் பலி!

01:49 PM Jun 12, 2024 IST | Web Editor
சேலம்  லாரி  பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி 5 பேர் பலி
Advertisement

சேலத்தில் லாரி மற்றும் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த பெண் குழந்தையும் பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

சேலம் மாவட்டம் வீராணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுக்கம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் அரூரில் இருந்து சேலம் நோக்கி லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது லாரிக்கு பின்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி குழந்தைகளுடன் வந்தவர்கள் மீது ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் இருந்து சேலம் நோக்கி வந்த சண்முகா என்கிற தனியார் டவுன் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகினர்.

இதில், படுகாயமடைந்த குழந்தை மற்றும் மற்றொரு நபரை அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மற்றொரு நபரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதையடுத்து சேலம் சுக்கம்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு ஆண், இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் என ஐந்து பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement