For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“CSK தோற்றதையே மறந்துவிட்டோம்” ரசிகர்களுடன் தல தோனியின் அதிரடி ஆட்டத்தை கொண்டாடிய சாக்ஷி தோனி!

07:23 AM Apr 01, 2024 IST | Web Editor
“csk தோற்றதையே மறந்துவிட்டோம்” ரசிகர்களுடன் தல தோனியின் அதிரடி ஆட்டத்தை கொண்டாடிய சாக்ஷி தோனி
Advertisement

சிஎஸ்கே அணி ரசிகர்கள் தோல்வியை பற்றி கவலைப்படாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தும் அதனை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஐபிஎல் 17-வது சீசனின் 13-வது போட்டியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணி சிறப்பாக விளையாடி 20  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி நிர்ணயித்த ஸ்கோரை அடிக்க களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர்.

அதன் பின் களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் சரிவர விளையாடவில்லை. ஒரு கட்டத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் தோனி களத்துக்குள் நுழைந்தார். இதை மைதானத்தில் இருந்த சென்னை  அணியின் ரசிகர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். அவரை ரசிகர்கள் கூச்சலிட்டு வரவேற்ற போது மைத்தனத்தில் 128 டெசிபல் (Decibal) அளவிற்கு சத்தம் பதிவானது. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் பதிவான அதிக டெசிபல் அளவு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தல தோனியும் அவரால் முடிந்த வரை வாய்ப்பாய் அமைந்த பந்துகள் அனைத்தையும் சிக்ஸர், பவுண்டரிகள் பறக்க விட்டார். ஆனாலும், சிஎஸ்கே அணியால் இலக்கை அடைய முடியாமல் தோல்வியடைந்தது. மேலும், சென்னை அணியின் இந்த தோல்வியை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் ‘தல தரிசனம்’ தான் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் உற்சாகத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சிஎஸ்கே ரசிகர்கள், சென்னை அணியின் போட்டிக்கு வருவதற்க்கு மிகமுக்கிய காரணங்களில் ஒன்று தான் ‘தல தோனியின் தரிசனம்’. அவர் எப்போது களத்தில் பேட்டிங் செய்வார் என்று எதிர்ப்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு அவரது வாணவேடிக்கையை காட்டினார் என்றே கூறலாம். மேலும், 2005 இல் ஆக்ரோஷமாக விளையாடிய தோனி தற்போது 2024-ல் திரும்பி வந்துவிட்டார் (Vintage Dhoni) என்று ரசிகர்கள் X களத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த போட்டியில் அவர் சற்று முன்பே களம் கண்டிருந்தால் சென்னை அணி நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். டெல்லி அணிக்கு எதிராக அதிரடி காட்டிய தல தோனி வெறும் 16 பந்துகளில் 37* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 3 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியானது மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி பெற்றுள்ளதுடன், தற்போது முதல் தோல்வியை தழுவி இருக்கிறது.

தோல்வியடைந்ததை கூட மறந்துவிட்டேன்....

சிஎஸ்கே அணி ரசிகர்கள் தோல்வியை பற்றி கவலைப்படாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் தான் இப்படி தோனியின் ஆட்டத்தை பார்த்து கொண்டாடுகிறார்கள் என்றால், தோனியின் மனைவி சாக்‌ஷியும் அப்படித்தான் கொண்டாடி இருக்கிறார். தோனியின் ஆட்டம் குறித்து அவரின் மனைவி சாக்‌ஷி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முதலில் ரிஷப் பண்ட்-க்கு வாழ்த்துகள். ஹாய் மாஹி.. உங்களின் அதிரடியான பேட்டிங்கால் நாம் தோல்வியடைந்ததை கூட மறந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுடன் தோனிக்கு எல்க்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. அந்த புகைப்படத்தையும் சாக்‌ஷி இணைத்துள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. வழக்கமாக ஐபிஎல் போட்டிகளின் தோனியுடன் இருக்கும் அவரின் மனைவி சாக்‌ஷி, மகளின் தேர்வுகள் காரணமாக வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளி பட்டியல்:

இதனையடுத்து, புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதல் இடத்தில் இருந்து சரிந்து இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளதுடன், முதல் இடத்தில் கொல்கத்தா அணி இருக்கிறது. 

அந்த அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று நான்கு புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளதுடன், ரன் ரேட் 1.04 ஆக உள்ளது.

சிஎஸ்கே அணி நான்கு புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே ரன் ரேட் 0.97 ஆகும். மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான அணி உள்ளதுடன், அது 2 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் 0.80 என ரன் ரேட் அடிப்படையில் உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடிய குஜராத் அணி இரண்டு வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது. ரன் ரேட் மைனஸ் 0.73 . 

ஐதராபாத் அணி 2 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், லக்னோ 2 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன. இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள டெல்லி அணி இரண்டு புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது. ரன் ரேட் மைனஸ் 0.01. 

எட்டாவது இடத்தில் பஞ்சாப் அணி இரண்டு புள்ளிகள் உடனும், ஒன்பதாவது இடத்தில் பெங்களுர் அணியும் உள்ளதுடன், மும்பை அணி பத்தாவது இடத்தில் இருக்கின்றது.

Tags :
Advertisement