For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை! ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் சர்ச்சை!

03:54 PM May 23, 2024 IST | Web Editor
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை  ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் சர்ச்சை
Advertisement

திருவள்ளுவர் தினம்,  நாளை கொண்டாடப்படும் என காவி உடையுடன் கூடிய திருவள்ளுவரின் புகைப்படத்துடன் கூடிய அழைப்பிதழை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி,  ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும்  ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர்,  திருவள்ளுவர்.  உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து,  உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர்.

1949-ல்,  மாநிலப் பிரிவினைக்கான குரல்கள் எழுந்த நேரத்தில்,  தை மாதத்தின் தொடக்க நாளை திருவள்ளுவர் ஆண்டாக மறைமலை அடிகளார் அறிவித்தார்.  தைத்திங்களில் தொடங்கும் திருவள்ளுவர் ஆண்டு நாட்காட்டிகளைத் தமிழ் இயக்கங்கள் பரப்பின.

இதனைத் தொடர்ந்து 1969-ல் முதல்வராக முதன்முறையாக பதவியேற்ற கருணாநிதி தைப்பொங்கலுக்கு மறுநாளைத் ’திருவள்ளுவர் நாள்’ என பிரகடனம் செய்து, அரசு விடுமுறை அறிவித்தார்.  அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும்,  தை மாதம் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் நாளை திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் எனக் கூறி,  ஆளுநர் மாளிகை அழைப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்று அச்சிடப்பட்டுள்ளது.  இது மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னரும் கடந்த ஜனவரி மாதமும் ஆளுநர் ரவியும்,  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.  இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Advertisement