For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்டுக்கு 'LBW' என வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!

09:31 AM Mar 05, 2024 IST | Web Editor
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்டுக்கு  lbw  என வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்
Advertisement

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்டுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

Advertisement

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.   மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.   இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

இந்த விழாவில் பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ரியானா, இவாங்கா டிரம்ப், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி உள்ளிட்ட ஏராளமான உலக பிரபலங்கள் பங்கேற்றனர்.  அதேபோல், இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், எம்.எஸ். தோனி, சானியா நேவால், அட்லீ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில்,   இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  அவர் அந்த பதிவில், "'எல்பிடபிள்யூ' (LBW) என்பது ஆனந்த் மற்றும் ராதிகாவின் அன்பு (Love), ஆசீர்வாதம் (Blessings) மற்றும் வாழ்த்துகளைக் ( Wishes) குறிக்கிறது! அழகான ஜோடிக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement