For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“I Miss You Tendulkar" ஜெர்சியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த ரசிகர் - அதிர்ச்சி கொடுத்த சச்சின்!

05:11 PM Feb 02, 2024 IST | Web Editor
“i miss you tendulkar  ஜெர்சியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த ரசிகர்   அதிர்ச்சி கொடுத்த சச்சின்
Advertisement

இரு சக்கர வாகனத்தில் சென்ற சச்சின் ரசிகர் ஒருவர் “Tendulkar I Miss You" என்று எழுதப்பட்ட ஜெர்சி ஒன்றை அணிந்திருந்தார். அவரை சாலையில் மறித்து சச்சின் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் இவர் தனது ரசிகர்களை சந்திப்பது குறித்த வீடியோவை பகிர்வதை பழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், சச்சின் காரில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் பைக்கில் “Tendulkar 10 I Miss You" என்று பதிக்கப்பட்ட, மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிந்து கொண்டு ரசிகர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த சச்சின் அந்த ரசிகரை சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பின் தொடர்ந்து சென்று அவரை நிறுத்தி விமான நிலையத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டார்.

சச்சினை பார்த்த உடன் அந்த ரசிகர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார். உங்களிடம் பேசி அறிமுகமாக வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு. உங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று ரசிகர் கூறினார்.

அந்த ரசிகர், அவரின் புகைப்படங்களை தனது டைரியில் வைத்திருப்பதாக கூறி எடுத்து காட்டினார். அந்த டைரியை வாங்கி பார்த்த சச்சின் அந்த ரசிகருக்கு அதே டைரியில் ஒரு ஆட்டோகிராபையும் போட்டுக் கொடுத்தார். பின்னர் இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அந்த ரசிகர் என் வாழ்நாளில் என்னுடைய கடவுளை நான் நேரில் பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.

அதற்கு சச்சின், நீங்கள் என்னுடைய ஜெர்சியை அணிந்து கொண்டிருந்தீர்கள். அதை பார்த்த பிறகு தான் நான் உங்களை நிறுத்தினேன் என்று கூறினார். மேலும் அந்த வீடியோவில் நான் காரில் சீட் பெல்ட் அணிந்து இருக்கிறேன். அவர் ஹெல்மெட் அணிந்திருக்கிறார். இதேபோன்று போக்குவரத்து விதியை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தளத்தில் "டெண்டுல்கரை சச்சின் சந்தித்தார். என் மேல் அன்பு காட்டுவது மனதிற்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது. எதிர்பார்க்கபடாத இடங்களில் இருந்து கிடைக்கும் அளவற்ற அன்பு வாழ்க்கைக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது." என பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tags :
Advertisement