For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீபாவளி சீட்டு மூலம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து தலைமறைவான சபரி சங்கர் கைது!

03:57 PM May 29, 2024 IST | Web Editor
தீபாவளி சீட்டு மூலம் ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்து தலைமறைவான சபரி சங்கர் கைது
Advertisement

தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, உட்பட 11 இடங்களில் நகை கடை நடத்தி சுமார் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக இருந்து வந்த சேலம் வலசையூரை சேர்ந்த சபரிசங்கரை தருமபுரி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, உட்பட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்தவர் சேலம் வலசையூரை சேர்ந்த சபரிசங்கர் (35). இவர் "பொங்கும் தங்கம்" என்ற பெயரில் பழைய நகைகளுக்கு புதிய நகைகள் தருவதாகவும், குறிப்பிட்ட தொகையை ஒவ்வொறு மாதமும் தவணை முறையில் முதலீடு செய்து வந்தால், செய்கூலி சேதாரமின்றி நகையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து தீபாவளி சீட்டு நடத்தி வந்தார்.

இந்த திட்டத்தின் மூலம் பணம் வசூல் செய்த சபரிசங்கர் 2023-ம் ஆண்டு தீபாவளி சமயத்தில் கடையை மூடிவிட்டு தலைமறைவானார். தீபாவளி சீட்டு மூலம் சபரிசங்கர் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் அடுத்தடுத்து புகார் அளித்து வந்தனர்.

இந்த புகாரின் பேரில் பாண்டிச்சேரியில் தலைமறைவாக இருந்த சபரி சங்கரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தருமபுரி மற்றும் அரூரில் செயல்பட்டு வந்த SVS ஜூவல்லரி கடையை மூடி சீல் வைத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags :
Advertisement