உக்ரைன் மீது 800 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே சமாதான முயற்சிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகள் மீது 805 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாகுதலில் இருவர் உயிரிழந்ததாகவும் ஒரு சில முக்கிய அரசு கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் விமானப்படையானது ரஷ்யாவால் ஏவப்பட்ட 747 ட்ரோன்கள் மற்றும் 4 ஏவுகணைகள் ஆகியவற்றை வானிலேயே இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போரில் நடத்தப்பட்டுள்ள மிகப்பெரியளவிலான வான்வழி தாக்குதலாக இதுவாகும்.