”சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் நாட்டு மக்களுக்கு அரணாக செயல்பட்டது” - பிரதமர் மோடி பேச்சு..!
டெல்லியிலுள்ள இன்று நடந்த ஆர்எஸ்எஸின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நினைவு தபால் தலை மற்றும் வெள்ளி நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,
”ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் தொண்மையான மரபின் மறுசீரமைப்பு .
ஆர்எஸ்எஸ் சங்கத்தின் நூற்றாண்டு விழாவைக் காண்பது தற்போதைய தலைமுறைக்கு பாக்கியம். தேசிய சேவைக்கான உறுதிப்பாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்ட எண்ணற்ற ஸ்வயம் சேவகர்களுக்கு வாழ்த்துக்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பாரத மாதாவின் உருவம் இந்திய நாணயத்தில் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறை. 1963 - ம் ஆண்டு ஜனவரி 26 - ம் தேதி நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் மிகுந்த பெருமையுடன் பங்கேற்றதை இந்த முத்திரை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின்போது ஆர்எஸ்எஸ் நாட்டு மக்களுக்கு அரணாக செயல்பட்டது. இதற்காக இந்த இயக்கத்தை தோற்றுவித்த கே.பி. ஹெட்கேவர் உள்பட உறுப்பினர்கள் பலர் சிறைக்குச் சென்றனர். சுதந்திரத்திற்குப் பிறகு நிஜாம்களால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. கோவா, தாத்ரா, நாகர் ஹவேலி சுதந்திரத்தின்போது இந்த இயக்கம் பல தியாகங்களை செய்தது. சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு வகையில் இடையூறுகள் இருந்தன'' என பிரதமர் மோடி பேசினார்.