ரூ. 457 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
காவல்துறை சார்பில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.
01:43 PM May 19, 2025 IST | Web Editor
Advertisement
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரூ.457 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
Advertisement
இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் புறநகர் பகுதி பிளிச்சியில் 211 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கோவை மத்திய சிறைச்சாலை (பகுதி 1) கட்டிடங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.