For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Crime | ரூ. 25 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் கடத்தல்… குற்றவாளிகளை வனத்துறையிடம் ஒப்படைக்காத திருத்தணி காவல்துறை… காரணம் என்ன?

03:29 PM Sep 25, 2024 IST | Web Editor
 crime   ரூ  25 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் கடத்தல்… குற்றவாளிகளை வனத்துறையிடம் ஒப்படைக்காத திருத்தணி காவல்துறை… காரணம் என்ன
Advertisement

ஆந்திராவில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புடைய செம்மரக்கட்டை கடத்தி 2 பேரை திருத்தணி போலீசார் கைது செய்தனர். ஆனால் செம்மரக் கட்டைகளையும், குற்றவாளிகளையும் வனத்துறையிடம் ஒப்படைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, முருகம்பட்டு
கிராம பகுதியில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச
பெருமாள், தனிப்படை உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் வாகன
தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவிலிருந்து வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி, சோதனை மேற்கொண்டனர்.

அந்த சரக்கு வாகனத்தில் 2 டன் எடையுடைய, 18 செம்மரக்கட்டைகள் இருந்தன. ரூ.25 லட்சம் மதிப்புடைய செம்மரக் கட்டைகளை கடத்திவந்த, சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கணேஷ் (45), ஜோதீஸ்வரர் ரெட்டி (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனால் குற்றவாளிகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், ஏழு மணி நேரம் திருத்தணி காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

காவல் நிலையத்தில் மரம் கடத்தல் தொடர்பான வழக்கை பதிவு செய்ய முடியாது என்பது காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியும். அப்படி இருந்தும் வனத்துறை அதிகாரிகளிடம்
ஒப்படைக்காமல், குற்றவாளிகளை 7 மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்திருந்த மர்மம் என்ன என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் வனத்துறை அதிகாரிகளும், குற்றவாளிகள் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்று தீர்க்கமாக தெரிவித்துள்ளனர்.

செம்மரக்கட்டைகள் கடத்தல் தொடர்பாக, வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படிதான் வழக்கு பதிவு செய்ய முடியும். ஆனால் இதுதெரிந்தும், திருத்தணி காவல்துறை அதிகாரிகள் எதற்காக
குற்றவாளிகளையும், செம்மரக்கட்டைகளையும் காலை 7 மணிமுதல் நண்பகல் ஒரு மணிவரை வைத்திருக்க வேண்டும். இதில் இருக்கும் மர்மம் என்ன என வனத்துறை அதிகாரிகளே
கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கும், அவ்வாறு எந்த கட்டைகளும் பிடிபடவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement