ரூ.19 லட்சம் மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகி மீது புகார்!
ஈரோடு அருகே பாஜக மாவட்ட தலைவரின் பெயரில் கிரயம் செய்யப்பட்ட நிலத்திற்கான பணத்தை வழங்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள எண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்
நாச்சிமுத்து. இவருடைய குடும்பத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் பூர்வீக நிலத்தை 4
சகோதர்கள் சரிசமமாக பிரித்து கொண்டனர். இதனையடுத்து கடந்த 2013ம் ஆண்டு
சம்பத்தப்பட்ட இடத்தை வாங்குவதற்காக, ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா
கட்சியின் தலைவர் கலைவாணி விஜயகுமார் என்பவரின் கணவர் விஜயகுமார் நாச்சிமுத்து மற்றும் அவரது சகோதரர்களை அனுகியுள்ளார். அப்போது, நாச்சிமுத்துவின் மூன்று சகோதரர்களும் அவர்களது நிலத்தை விற்பனை செய்த நிலையில், நாச்சிமுத்துவிற்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்குவதில் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
பேசியபடி பணத்தை வழங்கக்கோரி விஜயகுமாரை அனுகியபோது கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இது தொடர்பாக அந்தியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாச்சிமுத்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மகனுடன் வந்த நாச்சிமுத்து, புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவரின் கணவர் விஜயகுமார் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தனக்கு வரவேண்டிய 19.70 லட்சம் ரூபாயை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.