For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.1,01,580 #Electricitybill - விவசாயிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!

02:31 PM Oct 02, 2024 IST | Web Editor
ரூ 1 01 580  electricitybill   விவசாயிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்
Advertisement

கொடைக்கானல் அருகே விவசாயியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.1,01,580 என குறுஞ்செய்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது வீட்டில் 2 குண்டு பல்புகள் மட்டுமே உபயோகப்படுத்தி வருவகிறார். 100 யூனிட்டுக்கு குறைவான மின்சாரத்தையே பயன்படுத்தி வருவதால் இவர் மின் கட்டணம் செலுத்தவதில்லை. இவரது வீட்டில் அண்மையில் மின் கணக்கீடு செய்யப்பட்டது.

பின்னர், இவருக்கு 9,200 யூனிட்டு மின்சாரத்தை பயன்படுத்தி இருப்பதாகவும், இதனால் ரூ.1,01,580 செலுத்த வேண்டுமென குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக சமூகவலை தளங்களிலும் பதிவிடப்பட்டது.

இதையும் படியுங்கள் : #SwachhBharat 10 ஆண்டுகள் நிறைவு | மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி!

இதுகுறித்து கொடைக்கானல் மின் வாரிய உதவிப் பொறியாளா் குமார் கூறியதாவது :

"விவசாயி சந்திரசேகர் வீட்டில் 92 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை கணினியில் ஊழியர் பதிவு செய்யும் போது 92-க்கு பதிலாக தவறுதலாக இரண்டு பூஜ்ஜியம் கூடுதலாக 9200 என்று பதிவு செய்துவிட்டார். இதனால், அவருக்கு இவ்வளவு தொகை மின் கட்டணமாக செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது. இந்த குளறுபடி குறித்து திண்டுக்கல் மாவட்ட மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, விவசாயி சந்திரசேகா் வீட்டில் 100 யூனிட்டுக்கு குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளதால், அவர் மின் கட்டணம் செலுத்த தேவையில்லை"

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement