For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ரயில் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு ரூ.1.08 லட்சம் கோடி" - அஸ்வினி வைஷ்ணவ்

10:02 AM Jul 24, 2024 IST | Web Editor
 ரயில் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு ரூ 1 08 லட்சம் கோடி    அஸ்வினி வைஷ்ணவ்
Advertisement

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.62 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதில்  ரூ.1.08 லட்சம் கோடி பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு செலவிடப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Advertisement

2024 – 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றில் அதிக முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கிய செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.  இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.62 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த நிதி ஒதுக்கீட்டின் செலவினம் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது,

"இந்த நிதி ஒதுக்கீட்டில் ரூ.1.08 லட்சம் கோடி ரயில் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு செலவிடப்படும். குறிப்பாக பழைய ரயில் பாதைகளை சீரமைத்தல், சிக்னல் அமைப்பு மேம்பாடு, மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் கட்டுமானம் கவச் அமைப்பு நிறுவுதல் உள்ளிட்டவைகளுக்காக ஒதுக்கப்படும்.

'கவச்' அமைப்பு நிறுவுவதற்கு தான் ரயில்வே முன்னுரிமை அளித்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு முன் ரயில்வே துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு வெறும் ரூ.35,000 கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால் நடப்பாண்டு ரூ.2.62 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-க்கு முன் நாடு சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளில் 20,000 கி.மீ. ரயில் பாதை மட்டுமே மின்மயம் ஆக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 40,000 கி.மீ. ரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது.  கடந்த நிதியாண்டில் மட்டும் 5,300 கி.மீ. புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட்டன.

முன்னதாக காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் 4.1 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் பிரதமா் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 20 சதவீதம் கூடுதலாக 5 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.  குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பத்தினரே ரயில் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு, ரயிலின் மூன்றில் 2 பங்கு பெட்டிகள் ‘ஏசி’ அல்லாத பொதுப் பெட்டிகளாக இயக்கப்படுகின்றன"  என்றாா்.

Tags :
Advertisement