காவல்துறையின் தீவிர நடவடிக்கை - தஞ்சையில் சரணடைந்த ரவுடி சாமிரவி!
தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறையின் தீவிர நடவடிக்கையைக் கண்டு காவல் நிலையத்தில் ரவுடி சாமிரவி தானாக சரணடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் கடந்த ஆண்டு திருச்சென்னம் பூண்டியை சேர்ந்த ரவுடி வி.எஸ்.எல்.குமார் ( எ) முருகையன் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது இந்த கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு சாமி ரவி என்பவர் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் சாமி ரவி திருக்காட்டுப்பள்ளி நேற்று காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
சரணடைவதற்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாமி ரவி :
"இந்த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. இறந்து போனவருடைய மனைவி ஒரு அப்பாவி. அவருக்கு வெளி உலகம் தெரியாது. அவர் யாரோ சொல்லிக் கொடுத்து தான் எனது பெயரை புகாரில் கொடுத்துள்ளார். காவல்துறையும் என் மீது தானாக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
இதையும் படியுங்கள் : “மக்களை சுமைக்கு உள்ளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்துள்ளனர். என் மீது தொடர்ந்த வழக்குகள் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகி வருகிறேன். இப்போது காவல்துறையினர் தீவிரமாக இருப்பதால் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தேன்"
இவ்வாறு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.