ரவுடியை சுட்டு பிடித்த காவல்துறையினர் - தப்ப முயன்றதால் துப்பாக்கிச்சூடு!
சென்னையில் காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதாக ரவுடி ரோகித் ராஜன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ரோகித் ராஜ். இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. ரவுடி ரோகித் ராஜ் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 13 வழக்குகள் உள்ளன. சென்னை அமைந்தகரை, அண்ணா நகர் காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளன.
மயிலாப்பூர் சிவக்குமார், பிபிசி முருகன், பைனான்சியர் ஆறுமுகம் ஆகிய 3 கொலைகளை ரவுடி ரோகித் ராஜ் நடத்தியதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. குறிப்பாக பைனான்சியர் ஆறுமுகம் என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு செனாய் நகரில் வைத்து பட்டப்பகலில் வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையும் படியுங்கள் : சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை : 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டம்!
இந்நிலையில், ராயப்பேட்டை பகுதியில் ரோகித் ராஜ் காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்ச்சித்ததால் அவரை காலில் சுட்டு பிடித்தனர். இதில் காலில் காயமடைந்த ரோகித் ராஜ் கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.