வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோ... கிங் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது அல் நஸர்!
அல் தாவூன் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் தோல்வியுற்று கிங் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
சாம்பியன்ஸ் கிங் கோப்பை கால்பந்து தொடர் போட்டியில் அல் நஸர் (Al Nassr) மற்றும் அல் தாவூன் (Al Taawoun) அணிகள் மோதின. ரியாத்தில் நடந்த இந்த நாக்அவுட் போட்டியில் அல் தாவூன் வீரர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். எனினும் ரொனால்டோ கோல் அடிக்க போராடினார். 45+2வது நிமிடத்தில் Freekickயில் அவர் அடித்த On goal ஷாட்டை, எதிரணி கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார்.
இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 71வது அல் தாவூன் வீரர் Waleed Al-Ahmed, கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை எகிறி தலையால் முட்டி கோலாக மாற்றினார். அதன் பின்னர் அல் நஸர் அணிக்கு கூடுதல் நேரத்தில் (90+6) பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. எப்படியும் ரொனால்டோ கோல் முடித்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் செய்த கிக்கினால் பந்து கோல் போஸ்டிற்கு மேலே சென்றுவிட்டது.
மேலும் ரசிகர்களில் படம் பிடித்துக் கொண்டிருந்த சிறுவனை பந்து தாக்கியதில், அவரது செல்போன் பறந்து சென்று விழுந்தது. எளிமையான வாய்ப்பை தவறவிட்டார். தோல்விக்கு பின் ரொனால்டோ வெளியிட்ட பதிவில், ”ஒவ்வொரு சவாலும் வளர்வதற்கான ஒரு வாய்ப்புதான்" என கூறியுள்ளார். ஆனால் எளிமையான வாய்ப்பை தவறிவிட்டதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
5 முறை பேலன் தோர் (தங்கப் பந்து) விருது வாங்கிய ரொனால்டோ இரண்டாடுகள் ஆகியும் எந்தவொரு பெரிய கோப்பையையும் பெற்றுத் தரவில்லை. கடந்த 2022இல் அல்-நசீர் அணிக்காக ரொனால்டோ இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரம் கோடிக்கு 2025 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டார்.