ஒரே நாளில் யூட்யூபின் சில்வர், கோல்ட் & டயமண்ட் ப்ளே பட்டனை பெற்ற #Ronaldo!
புதன்கிழமை இரவு 8 மணிக்கு சரியாக தனது யூடியூப் பக்கத்தை ரொனல்டோ தொடங்கினார். தனது யூடியூப் பக்கத்தில் இணையுமாறு ரசிகர்களுக்கு ரொனால்டோ அழைப்பு விடுத்ததை தொடர்ந்து லட்சக்கணக்கான பேர் அவரது பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். வெறும் 90 நிமிடங்களில் 10 லட்சம் பேர் அவரது யூடியூப் கணக்கை பின் தொடர்ந்தனர்.
அதை தொடர்ந்து தற்போது அவரை அவரை பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியது. யூடியூப் நிறுவனம் ஒவ்வொருவருக்கும் அவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அதற்கேற்றார் போல் விருதுகளை வழங்கி வருகிறது. ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்களை பெறும் போது யூடியூப் சில்வர் பட்டன் வழங்குகிறது.
அதைத் தொடர்ந்து கோல்டன் பட்டன் இறுதியில் 1 கோடி சப்ஸ்கிரைபர்ஸ்களை பெறுவோருக்கு டைமண்ட் பட்டன் என யூடியூப் நிறுவனம் வழங்குகிறது. அந்த வகையில், ரொனால்டோ 22 நிமிடத்தில் சில்வர் பட்டனும், 90 நிமிடங்களில் கோல்டன் பட்டனும், 12 மணி நேரத்தில் டைமண்ட் பட்டனும் பெற்றுள்ளார்.
இதன் மூலம் 12 மணி நேரத்தில் யூடியூப்பின் அனைத்து விருதுகளையும் வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சிறப்பை ரொனால்டோ பெற்றார். தற்போது வரை 13 வீடியோ, 7 ஷார்ட்ஸ்களை பதிவிட்டுள்ள ரொனால்டோ அதன் மூலம் மட்டும் பல கோடி பார்வைகளை கடந்துள்ளார். இதற்கு முன் தென் கொரியா மகளிர் கே- பாப் குழுவை சேர்ந்த ஜென்னியின் யூடியூப் சேனல் குறைந்த நேரத்தில் 10 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்களை கடந்ததே சாதனையாக இருந்தது.
அதேபோல் Hamster Kombat என்ற வீடியோ கேம் தளம் அதிவிரைவில் 1 கோடி சப்ஸ்கிரைபர்ஸ்களை பெற்ற கணக்கு என சாதனை படைத்து இருந்தது. தற்போது இந்த சாதனைகளை எல்லாம் ரொனால்டோ துவம்சம் செய்து புது மைல்கல்லை படைத்துள்ளார். அதேபோல் சமூக வலைதளங்களில் அதிக பாலோயர்ஸ்களை கொண்டு இருக்கும் முதல் விளையாட்டு பிரபலம் என்கிற சிறப்பையும் ரொனால்டோ பெற்று உள்ளார்.
அவர் இன்ஸ்டாகிராமில் 633 மில்லியன், பேஸ்புக்கில் 170 மில்லியன் மற்றும் எக்ஸ் தளத்தில் 112 மில்லியன் உட்பட பல்வேறு சமூக தளங்களை சேர்த்து சுமார் 900 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் சமூக ஊடகங்களில் தற்போது அதிகம் பின்தொடரும் நபராக உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்ஸி 10 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூபில் இணைந்தார், தற்போது 207 வீடியோக்களுடன் 2.26 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார்.