For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை! - போலீசார் தீவிர விசாரணை...!

10:48 AM Jan 31, 2024 IST | Web Editor
தொழிலதிபர் வீட்டில் தங்கம்  வைர நகைகள் கொள்ளை    போலீசார் தீவிர விசாரணை
Advertisement

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு வீட்டில் தங்கம், வைரம், ரொக்கப் பணம் என பல கோடி மதிப்பில் கொள்ளை சம்பவத்தை அரங்கேறி இருப்பது குறித்து போலீசார் இரவு பகல் பாராமல் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் பீச் பகுதியில்
தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்களின் சொகுசு வீடு உள்ளது.
இந்த சொகுசு குடியிருப்புகளின் பின்புறம் காலி இடம் உள்ள நிலையில் ஜெர்மனியில்
உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டின் பின்புறம் அடையாளம் தெரியாத நபர்கள் பின்பக்கம்
கயிறு போட்டு மேலே வீட்டில் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது
தெரியவந்தது.

பின்னர் இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்திற்குத்
தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை அரங்கேறிய இடத்தை பார்வையிட்டு பின்னர் வீட்டின் உரிமையாளரான ஜெர்மனியில் உள்ள தொழிலதிபரின் மகன்களிடம் விசாரணை மேற்கொண்டதில் வீட்டில் வைத்திருந்த தங்க நகை, வைர நகை, ரொக்கப் பணம் என பல கோடி மதிப்பிடலானவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளனர்.

அதை தொடர்ந்து நீலாங்கரை உதவி ஆணையர் பரத் தலமையிலும், குற்றப்பிரிவு ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலும் தனிப்படை அமைத்து சொகுசு வீட்டில் துணிச்சலாகக் கைவரிசை காட்டியது யார் என்பது குறித்து புலன் விசாரணையை துவங்கினர்.

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் தரப்பில் பொருத்தப்பட்டிருக்கும்
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தும், அதேபோல் அருகில் உள்ள
வீடுகளில் பாதுகாப்பிற்காகப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான
காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டதில் இதுவரை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பதை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பல வருடங்களுக்குப் பிறகு சொகுசு
வீட்டில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம், ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளை போனது குறித்து அடையார் துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் நேரில் சென்று விசாரணையை மேற்கொண்டார்.

மேலும் வீட்டின் உரிமையாளர் ஜெர்மனியிலிருந்து சென்னைக்கு நாளை வரவுள்ள
நிலையில் அவர் வந்த பிறகே எவ்வளவு மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளை
போனது என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறினர்.

சொகுசு வீட்டின் பின்புறம் இருள் சூழ்ந்து காலி இடமாக காட்சியளித்த நிலையில்
அதை நோட்டமிட்டு திட்டம் தீட்டி வீட்டில் உரிமையாளர் இல்லாததை தெரிந்து கொண்டு
பின்பக்கம் கயிறு போட்டு மேலே ஏரி வீட்டில் நுழைந்து கொள்ளை சம்பவத்தை
அரங்கேற்றிருப்பது சொகுசு வீடுகள் உள்ள பகுதியில் பாதுகாப்பு இல்லாதது
குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement