Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ContainerLorryல் பணத்துடன் தப்பிச் சென்ற கொள்ளையர்கள்... சினிமா பாணியில் நடந்த சேசிங்... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

02:02 PM Sep 27, 2024 IST | Web Editor
Advertisement

ஏடிஎம்மில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற கும்பல் வெல்டிங் மிஷின் மூலம் கொள்ளை அடிக்கும் ஹரியானா மாநில கொள்ளை கும்பல் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாமக்கல் அருகே இன்று காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில் நிற்காமல் 4 இரு சக்கர வாகனங்கள், ஒரு காரை இடித்தபடி சென்று கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குமாரபாளையம் மற்றும் வெப்படி காவல் நிலைய போலீசார் கண்டெய்னர் லாரியை விரட்டிச் சென்றனர். பின்னர் சேலம் மாவட்டம், சன்னியாசிபட்டி அருகே கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்து பிடித்தனர். முதல்கட்ட தகவலின் படி கண்டெய்னர் லாரியில் கட்டு கட்டாக பணமும், சொகுசு கார் ஒன்றும் இருந்தது.

கேரளா மாநிலம் திருசூரில் ஏடிஎம்மில் இருந்து ரூ.66 லட்சம் கொள்ளையடித்து விட்டு வாகன தணிக்கையில் நிற்காமல் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினரை தொடர்ந்து சென்றதால் கண்டெய்னரில் உள்ளவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். இதனைத் தொடர்ந்து போலீசார் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

அப்பகுதியைச் சுற்றி சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 7 பேர் இந்த கண்டெய்னர் லாரியில் இருந்துள்ளனர். ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட இந்த லாரியில் இருந்தவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், கண்டெய்னர் லாரியில் சிக்கியது ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற ஹோண்டா கிரிட்டாக கார் என்பது தெரியவந்துள்ளது. அதனுடன், போலீசாரால் பிடிக்கப்பட்டவர்கள் வெல்டிங் மிஷின் மூலம் கொள்ளை அடிக்கும் ஹரியானா மாநில கொள்ளை கும்பல் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
containergun shotLorrynews7 tamilPolice
Advertisement
Next Article