திறப்பு விழாவிற்கு முன்னரே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் !
ராஜஸ்தான் மாநிலத்தில் திறப்பு விழாவிற்கு தயாராக இருந்த நெடுஞ்சாலை மழை வெள்ளத்தில் அடித்துசெல்லட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
04:38 PM Jul 10, 2025 IST | Web Editor
Advertisement
ராஜஸ்தான் ஜுன்ஜுனு மாவட்டத்தின் பாக்வாலி பகுதியில் பல லட்சம் செலவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்தவாரம் ஞாயிற்றுகிழமை பெய்த கனமழை காரணமாக பாக்வாலி - ஜஹாஜை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கட்லி நதிப் பகுதி தண்ணீரில் அடித்துச் செல்லபட்டது.
Advertisement
புதிய சாலை அமைத்தற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாத அளவிற்கு அச்சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் பெரும் அதிருப்பதி அடைந்தனர்.
ஆறு மாதங்களுகளாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று அண்மையில் தான் நிறைவுற்ற நிலையில், அச்சாலையில், 30 அடியில் பள்ளம் உருவாகி நதி நீர் பாய்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. திறப்பு விழா நடுத்துவதற்கு முன்னரே இத்தகைய சம்பவம் நடந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர்.