Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று பிரிட்டன் பொதுத் தோ்தல்! - புதிய அரசைத் தீா்மானிக்கப் போகும் எம்பிக்கள்!

10:31 AM Jul 04, 2024 IST | Web Editor
Advertisement

பிரிட்டனை அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் பொதுத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

Advertisement

2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டன. அது இந்தத் தோ்தலில் தான் முதல்முறையாக அமலுக்கு வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.

கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பிரதமர் விரும்பினால் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு முன்னரே தேர்தலை நடத்த மன்னரைக் கேட்டுக்கொள்ள முடியும். ஆனால் அந்த ஆண்டு இயற்றப்பட்ட நாடாளுமன்ற நிலைப் பருவ கால சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தோ்தல் நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் : நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹாலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது கூட்டணிக்கட்சி!

அந்தச் சட்டத்தை ரத்து செய்யும் நாடாளுமன்ற கலைப்புரிமை சட்டம் 2022-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நடைபெறும் முதல் தோ்தலும் இதுவாகும்.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி இந்தத் தோ்தலில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags :
keir starmerPMprime ministerRishi Sunakuk electionvoteVoters
Advertisement
Next Article