ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் - மீண்டும் தொடரில் இறங்குவாரா.?
இந்தியா கிரிக்கெட் அணி இந்திலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த புதன்கிழமை மான்செஸ்டரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தோ்வு செய்தது. இதனையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இந்த கூட்டணி . உணவு இடைவெளிக்குப் பிறகு ராகுல் 46 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 58 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது.
தொடர்ந்து ஆடிய சாய் சுதா்சன் - ரிஷப் பந்த் இணை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர், க்றிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பந்த்தின் காலில் பட்டதில் அவர் காயமடைந்தார். இதனை தொடர்ந்து ’ரிட்டையா்டு ஹா்ட்’ முறையில் வெளியேறிய ரிஷப் பந்த், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் தற்போது பிசிசிஐ ரிஷப் பந்தின் உடல் நிலை குறித்து தனது எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. அதில்
”மான்செஸ்டர் டெஸ்டின் முதல் நாளில் பேட்டிங் செய்யும் போது ரிஷப் பந்தின் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மைதானத்திலிருந்து ஸ்கேன் எடுக்க அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது பிசிசிஐ மருத்துவக் குழு அவரதுஉடல் நிலையை கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 83 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் சோ்த்துள்ளது. ஜடேஜா 19, ஷா்துல் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனா்.