#ICC-யின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 6வது இடத்திற்கு முன்னேறினார் ரிஷப் பண்ட்!
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் பல மாதங்கள் கழித்து மீண்டும் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார். திரும்பியது மட்டுமல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.
பல மாதங்கள் கழித்து விளையாடினாலும் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.ரிஷப் பண்ட் கடைசியாக 2022ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் களம் இறங்கி விளையாடினார். அதற்குப் பிறகு அவருக்கு கார் விபத்தில் காயம் ஏற்பட, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலமாக அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. தீவிர பயிற்சிக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய அவர் டி20 உலக கோப்பை மூலமாக இந்திய அணிக்குள் மீண்டும் நுழைந்தார். உலகக் கோப்பையில் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடி திரும்பவும் தனது வருகையை அணிக்கு உணர்த்தினார்.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பண்ட் முதல் இன்னிங்ஸில் ஓரளவு நன்றாக விளையாடினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் மீண்டும் ஐசிசி பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் ஆறாவது இடத்தை பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கடைசியாக 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இதே வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய போது 797 தரவரிசை புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருந்தார். அதற்குப் பிறகு ஒன்றரை வருடங்கள் கழித்து 731 புள்ளிகள் பெற்று ஆறாம் இடத்தில் இருக்கிறார். ஐசிசி தர வரிசைக்கு மீண்டும் பந்த் திரும்பியதற்கான காரணம், ஒரு வீரர் 12 முதல் 15 மாதங்கள் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் ரேட்டிங்கில் இருந்து வெளியே போனாலும் அந்த நபர் தனது ரேட்டிங் புள்ளிகளை தக்க வைத்துக் கொள்வார்.
இந்த காரணத்தால் தான் பந்த் தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைக்குள் நுழைந்து இருக்கிறார். மேலும் அவர் 15 மாதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாததே புள்ளிகள் குறைந்ததற்கும் காரணம். வீரர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற தகுதியான காலத்திற்கு உள்ளாக ஒரு போட்டியில் விளையாடியிருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 முதல் 15 மாதங்கள், அதுவே டி20 மற்றும் ஒரு நாள் தொடர் என்றால் ஒன்பது முதல் 12 மாதங்களுக்குள் விளையாடி இருக்க வேண்டும்.
பண்ட் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 39 ரன்கள் குவித்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 109 ரன்கள் குவித்திருக்கிறார் மேலும் 34 டெஸ்ட் போட்டியில் விளையாடி 2419 ரன்களும் குவித்திருக்கிறார்.