For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!

என்னுடைய படங்கள் அனைத்தும் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்று இயக்குனர் கே.எஸ்.அதியமான் தெரிவித்துள்ளார்.
11:07 AM Jul 17, 2025 IST | Web Editor
என்னுடைய படங்கள் அனைத்தும் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்று இயக்குனர் கே.எஸ்.அதியமான் தெரிவித்துள்ளார்.
கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு
Advertisement

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை கே.எஸ்.அதியமான் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisement

நடிகர் விதார்த், லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு என பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில், சஞ்சித், அபிராமி என்கிற இளம் ஜோடியும் அறிமுகமாகின்றனர். இயக்குநர்கள் ராஜ்கபூர் மற்றும், மகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலயா இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் படம் பற்றி இயக்குநர் கே.எஸ்.அதியமான் கூறுகையில், "ஒரு அம்மா – பையன், ஒரு கணவன் - மனைவி, ஒரு காதல் இவற்றை சுற்றி நடக்கின்ற உண்மைக்கு நெருக்கமான கதை. அனைவராலும் உணர்ப்பூர்வமாக இந்த கதையை தங்களுடன் தொடர்பு படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். என்னுடைய படங்கள் எல்லாமே உண்மைக்கு மிக நெருக்கமாகத்தான் இருந்திருக்கின்றன. இந்த கதை உண்மையாகவே இருக்கும்” என்றார்.

Tags :
Advertisement