For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்" - ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன்!

11:23 AM Jun 18, 2024 IST | Web Editor
“வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்    ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன்
Advertisement

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாடு குறித்து தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஜனநாயக அமைப்புகளை கைப்பற்றி வருகிறார்கள். இந்த சூழலில் வெளிப்படையான தேர்தல் செயல்முறைகளில் மட்டுமே பொது மக்களுக்கான பாதுகாப்பு உள்ளது. இவிஎம் இயந்திரங்கள் தற்போது கருப்பு பெட்டியாக உள்ளன. தேர்தல் ஆணையம் இந்த இயந்திரங்கள் மற்றும் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதே போல சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பல தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படலாம் என்று தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “மேம்பட்ட ஜனநாயக நாடுகளில் தேர்தல் நடைமுறைகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் அல்ல, காகித வாக்குச்சீட்டுகளால் ஆதரிக்கப்படுகின்றன. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் இந்தியாவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைவிட வேண்டும். நீதி வழங்குவதை உறுதி செய்வதுடன், அதன் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement