For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'ரெட்ரோ' காமிக்ஸ் : இரண்டாவது எபிசோட் வெளியானது!

06:24 PM Feb 17, 2025 IST | Web Editor
 ரெட்ரோ  காமிக்ஸ்   இரண்டாவது எபிசோட் வெளியானது
Advertisement

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரெட்ரோ’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.

இப்படத்திலிருந்து இதுவரை வெளியான முன்னோட்ட வீடியோ மற்றும் கடந்தாண்டு டிசம்பரில் வெளியான டைட்டில், டீசர் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாக போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை படக்குழு காமிக் வடிவத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி, அதன் முதல் எபிசோடை கடந்த வாரம் படக்குழு வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது காமிக்கின் இரண்டாவது எபிசோடை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Tags :
Advertisement