சவுதி அரேபியாவில் #RetiredAirplanes கொண்டு செல்லப்பட்ட நிகழ்வு - புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
சவுதி அரேபியாவில் உபயோகத்திற்கு இல்லாத விமானங்கள் கொண்டு செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் சவுதி ஏர்லைன்ஸில் இருந்து சில விமானங்கள் வெளியேற்றப்பட்டன. இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஜித்தாவி பகுதியிலிருந்து ரியாத்துக்கு உபயோகத்திற்கு இல்லாத விமானங்கள் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
சவுதி அரேபியாவின் ஜித்தாவி பகுதியிலிருந்து ரியாத்துக்கு எடுத்து செல்லப்பட்ட உபயோகத்திற்கு இல்லாத விமானங்களை காண அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். இதில் மொத்தமாக 5 உபயோகத்திற்கு இல்லாத விமானங்கள் கொண்டு செல்லப்பட்டன.
இதையும் படியுங்கள் : #ChessOlympiad | 3-வது சுற்றிலும் இந்திய அணிகள் ஹாட்ரிக் வெற்றி!
பெரிய விமானங்கள் டிரக்குகள் மற்றும் வாகனங்கள் மூலம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடனும் ஆச்சிரியத்துடனும் பார்த்தனர். அதில் சிலர், விமானங்கள் கொண்டு செல்லப்படுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த சிறுவர்கள் விமானங்களுக்கு மரியாதை செலுத்தினர்.