16 வயதுக்குட்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு கட்டுப்பாடு - டீனேஜர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்திய மெட்டா!
மெட்டா நிறுவத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ் அப், த்ரெட் உள்ளிட்ட செயலிகள் இயங்குகிறது. இந்த செயலிகளில் அவ்வப்ப்போது மெட்டா நிறுவனம் சில மாற்றங்களை கொண்டு வரும். அந்த வகையில் தற்போது 16 வயதுக்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் நிர்வாணத்தை நேரடியாக ஒளிபரப்பவோ அல்லது மங்கலாக்கவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் கீழ், பெற்றோர் அனுமதி வழங்காவிட்டால், 16 வயதுக்குட்பட்ட டீனேஜர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கான பாதுகாப்புகளை Facebook மற்றும் Messenger-க்கும் விரிவுபடுத்துவதாக மெட்டா தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் முதலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும், பின்னர் அடுத்த மாதங்களில் உலகளாவிய பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாட்டை பார்வையிட கூடுதல் விருப்பங்களை வழங்குவதற்காக, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் கணக்கை மெட்டா அறிமுகப்படுத்தியது. அதன் பின்பு மெட்டா அதன் பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் தளங்களுக்கு கணக்குகளை பாதுகாப்புகளை விரிவுபடுத்துவதாகக் கூறியது. டீன் ஏஜ் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஏற்கெனவே உள்ள பாதுகாப்புகள் இதில் அடங்கும்.
மேலும் இதில் டீன் ஏஜ் கணக்குகளை அந்நியர்களிடமிருந்து தனிப்பட்ட செய்திகளைத் தடுப்பது, சண்டை வீடியோக்கள், வரம்பு மீறியவற்றை பார்த்தால் 60 நிமிடங்களுக்குப் பிறகு செயலியை விட்டு வெளியேற நோட்டிஃபிகேஷன் அனுப்பும் அம்சங்களும் அடங்கும்.