Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் - உடனடியாக வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

11:31 AM Feb 12, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் புறக்கணித்த, ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளிநடப்பு செய்தார். 

Advertisement

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டப் பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

இதையும் படியுங்கள் ; 3வது முறையாக யு-19 கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

அதனைத் தொடர்ந்து தமிழில் வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார். ஆனால்,  சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக படிக்கவில்லை. அப்போது சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார்.

பின்னர், உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாக தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களிலே தனது உரையை முடித்துக் கொண்டார்.  ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார்.

இதையடுத்து,  ஆளுநர் ஆர். என். ரவி வாசிக்காத உரையை சட்டப்பேரவைக் குறிப்பில் முழுவதுமாக பதிவிடவும், ஆளுநருக்கு எதிராகவும் அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார்.  இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.  அப்போது சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.

Tags :
AppavuBudgetDurai MuruganGovernorRNRavispeakerspeechTamilnaduAssemblyTNAssembly
Advertisement
Next Article