For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காவல் நிலையத்தில் மழை, வெயிலில் கிடந்து வீணாகும் இரு சக்கர வாகனங்கள்....உரிமையாளர்கள் வேதனை...

05:13 PM Nov 16, 2023 IST | Web Editor
காவல் நிலையத்தில் மழை  வெயிலில் கிடந்து வீணாகும் இரு சக்கர வாகனங்கள்    உரிமையாளர்கள் வேதனை
Advertisement

காவல் நிலையத்தில் மழை, வெயிலில் நின்று வீணாகி வரும் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களால், புகாரளிக்க வருபவர்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவிக்கின்றனர்.

Advertisement

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்
மழை, வெயிலில் நின்று வீணாகி வருகின்றன. மேலும் புகார் அளிக்க வருபவர்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிவகஙகை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் ரோந்து பணியின்போது உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டி வரப்பட்ட வாகனங்கள் என சுமார் 300க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.  இங்கு அவ்வளவு வாகனங்களை நிறுத்த போதிய இட வசதியும் மேற்கூரைகளும் இல்லாததால்  நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மழை மற்றும் வெயிலில் நின்று வீணாகி வருகின்றன. ஒன்றுடன் ஒன்று மேலே விழுந்து வாகனங்களின் பாகங்களும் சேதமாகி வருகிறது.

இங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் ஆவணங்கள் சமர்பிக்கப்படாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களாக உள்ளன.  இவை அனைத்தும் அண்மையில் வாங்கப்பட்ட வாகனஙகளாகவே உள்ள நிலையில் உரிமையாளர்கள்
இதனை கண்டால் வருத்தத்திற்குள்ளாகின்றனர்.  மேலும் இந்த வாகனங்கள் காவல் நிலையம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதால் போதுமான இடமின்றி காணப்படுகிறது.

மேலும் புகாரளிக்க வருபவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தவும், பணிபுரியும் காவலர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தவும் வழி இன்றி தவித்து வருகின்றனர். எனவே வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags :
Advertisement