Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குடியரசு தின விழா – டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் திரௌவுபதி முர்மு!

11:28 AM Jan 26, 2024 IST | Web Editor
Advertisement

நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

Advertisement

நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  75வது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.  அணிவகுப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் அரசுத் துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.

முன்னதாக குடியரசு தினவிழாவையொட்டி போர் நினைவிடத்தில் மறைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.  செங்கோட்டை வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோரை வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

இதையும் படியுங்கள்:  ‘கேப்டன்’ விஜயகாந்துக்கு பத்ம பூஷண் – வெங்கய்யா நாயுடு, சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் அறிவிப்பு!!

குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி தலைநகர் டெல்லி முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  டெல்லியின் முக்கிய சாலைகளில் விடிய விடிய வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.  துணை ராணுவப் படையினர் உட்பட 70,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags :
75th Republic DayDelhidraupadi murmuFranceGuestImmanuel MacronIndiaNarendra modinews7 tamilNews7 Tamil UpdatesPM Modirepublic day
Advertisement
Next Article