சென்னையில் குடியரசு தின விழா - தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை எதிரே நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படை உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, பல்வேறு குழுக்களின் நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இதையும் படியுங்கள் : ‘கேப்டன்’ விஜயகாந்துக்கு பத்ம பூஷண் - வெங்கய்யா நாயுடு, சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் அறிவிப்பு!!
இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை சாதனையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.