For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகாரில் 65% இடஒதுக்கீடு சட்டம் ரத்து - பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடி!

02:56 PM Jun 20, 2024 IST | Web Editor
பீகாரில் 65  இடஒதுக்கீடு சட்டம் ரத்து   பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடி
Advertisement

பீகாரில் அரசு வேலை, கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி. மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

Advertisement

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  அந்த மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் உள்ளார்.  மாநிலத்தில் கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது.  இது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.  இதைத் தொடர்ந்து,  அரசு வேலை மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் அளவை உயர்த்த மாநில அரசு முடிவு செய்தது.

இதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  அரசு வேலை,  கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  எஸ்.சி. மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி சட்டம் இயற்றப்பட்டது.  இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் வினோத் சந்திரன் மற்றும் ஹரீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதன்படி அரசு வேலை, கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி. மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

Tags :
Advertisement