பிரதமர் மோடி இன்று திறந்த புதிய பாம்பன் ரயில் பாலத்தில் பழுது!
பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இன்று(ஏப்ரல்.06) ரூ.544 கோடி மதிப்பீட்டில் 2.08 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள புதிய ரயில் பாலத்தை திறக்கும் வகையில் தாம்பரம் - ராமேஸ்வரம் இடையேன ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் 8300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார்.
பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் ஹைட்ராலிக் முறையில் இயங்குகிறது. இந்தப் புதிய ரயில் பாலம் வழியாக கப்பல் செல்லும்போது , செங்குத்தான நிலையில் 24 கயிறுகளைக் கொண்டு பாலம் தூக்கப்படுகிறது.
இந்த நிலையில் செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தை கீழே இறக்க முடியாமல் பழுதாகி தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றம், இறக்கமாக உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பழுது நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.