For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது - வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

12:04 PM Jun 04, 2024 IST | Web Editor
புதுச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது   வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
Advertisement

புதுச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான காரணத்தால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்ததாக வாக்கு இயந்திரத்தில் பதிவாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தல் நடைபெற்று சுமார் 45 நாட்களுக்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : டி20 உலக கோப்பை : 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி!

இந்நிலையில்,புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிகுட்டபட்ட காட்டேரிகுப்பம் 1/33 பூத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக அந்த ஒரு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பூத்தில் மொத்தம் 938 வாக்குகள் பதிவாகியுள்ளது.இதனால்,  புதுச்சேரியில் வாக்கு எண்ணும் பணியில் சுற்று தாமதமாகி உள்ளது.

வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்துள்ள நிலையில், அந்த பூத்தில் விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement