நாமக்கல், கரூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தவெக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சுற்றுப் பயணத்தின்போது தவெக சார்பில் தொண்டர்களும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கரூர்-ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தவெகவினர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் தரப்பில் பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திட்டமிட்டபடி நாமக்கல், கே.எஸ்.திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கும், கரூர், வேலுச்சாமிபுரத்தில் நண்பகல் 12.00 மணிக்கும் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.