For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அம்மா உணவகங்கள் சீரமைப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை, ‘My Captain' செயலி” - வெளியானது தேமுதிக தேர்தல் அறிக்கை!

05:34 PM Apr 15, 2024 IST | Web Editor
“அம்மா உணவகங்கள் சீரமைப்பு  எய்ம்ஸ் மருத்துவமனை  ‘my captain  செயலி”   வெளியானது தேமுதிக தேர்தல் அறிக்கை
Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார்.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர், மத்திய சென்னை உள்ளிட்ட 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இதனிடையே அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகரில் உள்ள தனியார் ரெசிடென்சியில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான 46 வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை வெளியிட்டார். 

சிறப்பு அம்சங்கள்: 

  • தென்மாவட்ட மக்கள் பயன்பெற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் துவங்கப்பட்ட காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் மீண்டும் துவங்க நடவடிக்கை
  • நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் (MPLADS) தொகுதியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களுக்கான புதிய சமையல் மற்றும் தளவாட பொருட்கள் வழங்கி புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படும்.
  • அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்படும் மல்லிகை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாசனை திரவியம் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • விருதுநகரில் பரவலாக பயிரிடப்படும் சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு விற்பனை செய்ய மத்திய அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்யப்படும்.
  • விருதுநகரில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரி (NIFT) துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைகள் நான்கு வழிச்சாலை ஆக்கப்படும்.
  • விபத்தில்லா சிவகாசி என்ற திட்டத்தின் கீழ் பட்டாசு ஆலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு எளிதாக கல்வி கடன் கிடைக்க அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து முகாம்கள் நடத்தப்படும்.
  • விருதுநகர் மக்களவை தொகுதியில் வீடற்ற ஏழைகளுக்கு மத்திய அரசின் திட்டத்தில் வீடு வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
  • காய்கறிகள், பூக்கள், தானியங்கள் ஆகியவை பாதுகாக்க 100 டன் அளவிலான குளிர்ப்பதன கிடங்குகள் 50% மானியத்துடன் அதிகளவில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தேசிய அளவிலான போட்டி தேர்வில் நமது மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்கும் வண்ணம் என் சொந்த முயற்சியில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
  • "MY CAPTAIN" என்ற செயலி உருவாக்கப்பட்டு பொதுமக்கள் குறைகள் கூறவும், மத்திய மாநில அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள் அறியவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கேப்டன் இலவச கணினி மையம், தையல் பயிற்சி மையம் அமைத்து பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவேன்
Tags :
Advertisement