For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரிமோட் மூலம் கைவிலங்கிடும் கருவிகள்! - சென்னை பெருநகர காவல்துறை அறிமுகம்!

01:37 PM Feb 27, 2024 IST | Web Editor
ரிமோட் மூலம் கைவிலங்கிடும் கருவிகள்    சென்னை பெருநகர காவல்துறை அறிமுகம்
Advertisement

தப்பிய ஒடிய குற்றவாளிகளை பிடிக்கும் ரிமோட் ரெஸ்ட்ரெயின்ட் கருவியை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

Advertisement

சென்னை பெருநகர காவல்துறை ஒரு புதிய கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது. சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளிகளை பிடிப்பதற்கும்,  சந்தேகத்திற்கு உட்பட்ட நபர்களை பிடிக்கும் நோக்கத்தில் இந்த கருவியை சென்னை பெருநகர காவல்துறை கண்டு பிடித்துள்ளது.  இந்த கருவிக்கு ரிமோட் ரெஸ்ட்ரெயின்ட் கருவி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “பிரதிபலன் பார்க்காமல் உதவுபவன் இறைவனுக்கு சமமானவன்” – மிக்ஜாம் புயல் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

இந்த நூதன தொழில்நுட்பத்தின் மூலம் 10 அடி முதல் 25 அடி தூரத்தில் இருக்கும் சந்தேகத்திற்கு உட்பட்ட நபர்கள் அல்லது சிறையில் இருந்து தப்பிய குற்றவாளிகள் உள்ளிட்டோரை சுலபமாக சிக்க வைக்கும் திறன் கொண்டது இந்த ரிமோட் ரெஸ்ட்ரெயின்ட் கருவி.  இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பான மற்றும் அதிக உயிரிழப்பு இல்லாத அணுகுமுறையின் நோக்கத்துடன் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  இந்த ரிமோட் ரெஸ்ட்ரெயின்ட் கருவியின் பயன்பாட்டை வரும் மாதங்களில் அதிகரிக்க சென்னை பெருநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது.  இந்த கருவி 8 அங்குல கெவ்லர் வடத்தை வெளியேற்றி சந்தேகத்திற்கு உட்பட்ட நபரின் உடலில் மூன்று முறை வரை வேகமாகச் சுற்றி இந்த நபரை அசையாமல் செய்கிறது.  மேலும், இந்த கருவி  அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்களுக்கு ஏற்படும் காயங்களைக் குறைக்கும் திறனை கொண்டுள்ளது.

இது குறித்து ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஆர்.சக்திவேல் கூறியதாவது :

"இந்த புதிய முயற்சியை வரவேற்கிறேன். ச ண்டைகளை நிறுத்துவது அல்லது குற்றவாளிகளைத் துரத்துவது போன்ற பதட்டமான சூழ்நிலைகளின் போது ஏற்படும் உடல்ரீதியான மோதல்களுக்குப் புதிய கருவிகள் பாதுகாப்பான மாற்றாகச் செயல்படும். அனைத்து காவல்துறைக்கு இதுபோன்ற கருவிகள் வழங்கப்பட்டால், தப்பியோடிய சந்தேகத்திற்கு உட்பட்ட நபர்களை கொலை செய்யும் சக்திக்கு போலீசார் இனி காரணம் காட்ட முடியாது"

இவ்வாறு ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஆர்.சக்திவேல் தெரிவித்தார்.

Tags :
Advertisement