Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்!

06:28 PM Dec 24, 2023 IST | Web Editor
Advertisement

தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச. 17, 18ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.  இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"கடந்த வாரம் பெய்த கனமழையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் தங்களது உடைமைகள் மற்றும் வாகனங்களை இழந்துள்ளனர். வியாபாரிகள் கடைகளில் உள்ள விற்பனைப் பொருட்கள் மற்றும் கணினி, மின்சாதனப் பொருட்கள் என்று அனைத்தையும் இழந்துள்ளனர்.

கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது திமுக அரசு அறிவித்துள்ள 6,000/- ரூபாய் நிவாரணத் தொகையை 15,000/- ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், மேலும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைக் கழிவுகள், இறந்த கால்நடைகள் போன்வற்றை உரிய முறையில் அகற்றி, நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, சுகாதாரப் பணிகளை உடனடியாகத் துவங்கிட திமுக அரசை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
#medicalcampADMKCMFUNDDamageDMKEPSFloodsReliefMKStalinMKstalinGovtNews7Tamilnews7TamilUpdatesRelefFundSouthFloodsTamilNaduTNFloods
Advertisement
Next Article