For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீரில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - குளிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்!

01:40 PM Dec 24, 2024 IST | Web Editor
நீரில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு   குளிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்
Advertisement

கிணற்றில் குளிக்கச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் திடீர் நகரை சேர்ந்தவர் சிவா (48). இவருக்கு இரண்டு மகள்களும் பரத் என்ற மகனும் இருந்தனர். பரத் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு இன்று (டிசம் 24) நிறைவடைந்த நிலையில் பரத் தனது நண்பர்களுடன் சேர்ந்து வழுதளம்பேடு கிராமத்தில் உள்ள விவசாய தரைகிணற்றிற்கு குளிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது பரத் குளிப்பதற்காக கிணற்றில் குதித்தார். பரத்திற்கு நீச்சல் தெரியாததால் அவரால் மேலே வர இயலவில்லை. கிணற்றில் குதித்த பரத் மேலே வராததால் அச்சமடைந்த அவரின் நண்பர்கள் அங்கிருந்து ஓடினர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேரமாக போராடிய நிலையில் மாயமான பரத் சடலமாக மீட்கப்பட்டார்.

மாணவனின் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த மாணவருடன் குளிக்க சென்ற சக மாணவர்கள் யார் யார் என்பது குறித்தும், உயிரிழப்புக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement