For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்னாப்பிரிக்க வழக்கை எதிர்கொள்ள தயார் - இஸ்ரேல் அறிவிப்பு!

03:42 PM Jan 03, 2024 IST | Web Editor
தென்னாப்பிரிக்க வழக்கை எதிர்கொள்ள தயார்   இஸ்ரேல் அறிவிப்பு
Advertisement

தென்னாப்பிரிக்காவை சர்வதேச நீதிமன்றத்தில் எதிர்க்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

Advertisement

3 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வரும் நிலையில்,  இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 1,147 பேர் உயிரிழந்துள்ளனர்.  இஸ்ரேல் ராணுவம் இதற்கு பதிலடியாக காஸா நகரில் நடத்திய தாக்குதலில் 21, 978 பேர் உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,436 ஆக உயர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,  பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவருவதாக சர்வதேச நீதி மன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது.  இஸ்ரேல், சர்வதேச சட்டத்தை மீறுவதாக தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியது.  அதனுடன் காஸா மீதான தாக்குதல்களை நிறுத்த ஆணை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தது.

இதையும் படியுங்கள்: ‘திடீர்’ பெட்ரோல் தட்டுப்பாடு; குதிரையில் உணவு டெலிவரி – வீடியோ வைரல்!

தொடர்ந்து 'அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை அரசியல் மற்றும் சட்டத்தைக் கொண்டு மறைக்கும் முயற்சி தான் இது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தித்தொடர்பாளரிடன் தெரிவித்துள்ளார்.

'காஸாவின் மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகளில் ஒளிந்திருக்கும் ஹமாஸ் அமைப்பு மட்டுமே இந்த போருக்கு முழு பொறுப்பு' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தென்னாப்பிரிக்காவின் இந்த அபத்தமான குற்றச்சாட்டை சர்வதேச நீதிமன்றத்தில் எதிர் கொள்ள இருப்பதாக இஸ்ரேல் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.  இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜன.11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement