RCBvsSRH | இறுதி வரை களத்தில் நின்று அசத்திய இஷான் கிஷான் - பெங்களூரு அணிக்கு 232 ரன்கள் இலக்கு!
ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள பெங்களூர் அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். ஹைதராபாத் அணி ஏற்கெனவே நடப்பாண்டு ஐபில் தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த சூழலில் ஐபிஎல் போட்டியின் 65வது லீக் சுற்று போட்டி, ஜிதேஷ் சர்மா தலைமையிலான பெங்களூர் அணிக்கும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கும் இடையே இன்று(மே.23) நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஹைதராபாத் அணியில், அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் இறுதி வரை களத்தில் நின்று 94* ரன்கள் அடித்து அசத்தினார். இவருடன் இணைந்து ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா 34 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 24 ரன்களும், அனிகேத் வர்மா 26 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொல்லும்படியான அளவிற்கு ரன்கள் சேர்க்க தவறினர். இதன் மூலம் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை குவித்தது. இதையடுத்து பெங்களூர் அணி 232 என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்ய உள்ளது.