For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை முடக்க உத்தரவு - ரிசர்வ் வங்கி அதிரடி!

01:27 PM Jan 01, 2025 IST | Web Editor
பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை முடக்க உத்தரவு   ரிசர்வ் வங்கி அதிரடி
Advertisement

பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை மூன்று வகைகளாக பிரித்து முடக்க கூறி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ரிசர்வ் வங்கியானது வங்கி கணக்குகளை மூடுவதற்கு புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. 3 வகையான செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடிகள் நிகழ்கிறது. இதனை தடுக்கும் நோக்கில் வங்கி கணக்குகளை மூடுவதற்கு புதிய நெறிமுறைகளை அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நோக்கில், நீண்ட நாட்கள் பயன்படுத்தாத கணக்குகளை 3 வகைகளாக பிரித்து அவற்றை மூட உள்ளன.

2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எவ்வித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகளை பயன்பாட்டில் இல்லாத கணக்காக வகைப்படுத்தப்படுகிறது. இந்த கணக்குகளை குறிவைத்து சைபர் மோசடி நடக்கிறது. அதனால், இந்த வகை கணக்குகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, 12 மாதங்களுக்கு மேலாக எந்தவித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகளாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த வகை கணக்குகளை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமானால், வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளையை நேரடியாக அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, நீண்ட நாள்களாக இருப்புத் தொகை இல்லாமல் இருக்கும் 'ஜீரோ பேலன்ஸ் கணக்கு'களை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கணக்குகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 12 மாதங்களாக செயலற்ற முறையில் உங்கள் கணக்கு இருந்தால், உடனடியாக ஒரு பரிவர்த்தனை மேற்கொண்டு வங்கி நடவடிக்கைகளில் இருந்து தப்பிக் கொள்ளலாம். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கணக்கு செயல்பாட்டில் இல்லையென்றால், வங்கிக் கிளையை நேரடியாக நாடி, கணக்கை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

Tags :
Advertisement