For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இணைந்தார் ரவி வர்மன்!

அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இரண்டாவது இந்திய உறுப்பினராக அங்கிகாரம் பெற்றார் ரவி வர்மன்.
03:58 PM Jan 30, 2025 IST | Web Editor
அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இணைந்தார் ரவி வர்மன்
Advertisement

இந்திய திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் ரவி வர்மன். இவர் ஜலமர்மரம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானர். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழி படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.

Advertisement

தமிழில் 5 ஸ்டார், ஆட்டோகிராஃப், அந்நியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, ஜப்பான், இந்தியன் 2 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” படத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் ஷங்கர்- கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 3 படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ள ரவி வர்மன் அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராக இணைந்துள்ளார்.

இதையடுத்து, அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திற்க்கு நன்றி தெரிவித்து ரவி வர்மன் பேசுகையில், "உலகம் முழுவதிலுமிருந்து ஒளிப்பதிவாளர்கள் இந்த சங்கத்தில் சேர கனவு காண்கிறார்கள். ஆஸ்கர் உட்பட விருதுகளை வென்ற உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் உறுப்பினர்களாக உள்ள ஒரு தளத்தில் நானும் சேர்க்கப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் தருகிறது" என்றார்.

இதன் மூலம் இரண்டாவது அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராகும் இந்தியர் என்ற பெருமையை ரவிவர்மன் பெற்றுள்ளார். முன்னதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மட்டுமே இந்த சங்கத்தின் உறுப்பினராக ஏற்றுகொள்ளப்பட்டார்.

Tags :
Advertisement