ராசிபுரம் துலுக்க சூடாமணி அம்மன் கோயில் - வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!..
ராசிபுரம் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோயிலில் பங்குனி மாத தோரேட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பட்டியில், பிரசித்தி பெற்ற துலுக்க
சூடாமணி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தேரோட்ட திருவிழா கடந்த 3
மாதத்திற்க்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி
தினந்தோறும் ஒவ்வொரு சமூகத்தின் சார்பிலும் சாமி ஊர்வலம் நடந்தது. இந்நிலையில், இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் சாலையில் உருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்பட்டது. பூஜைகள்
செய்யப்பட்டு மேளதாளத்துடன் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துசென்றனர். காலையில் தேரடி
நிலையத்தில் இருந்து புறப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலையில்
கோயிலை வந்தடைந்தது. தேரோட்டத்தில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி,
விழுப்புரம், ஈரோடு உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை புரிந்து
சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி நகைச்சுவை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற நீண்ட அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.