For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராஷ்மிகா பிறந்தநாள்: புஷ்பா 2 புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

02:12 PM Apr 05, 2024 IST | Web Editor
ராஷ்மிகா பிறந்தநாள்  புஷ்பா 2 புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
Advertisement

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளையொட்டி, புதிய போஸ்டர் ஒன்றை புஷ்பா 2 படக்குழு வெளியிட்டுள்ளது. 

Advertisement

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா.  இந்த படம் தமிழ்,  தெலுங்கு,  இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது.  கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.  இந்தியா முழுவதும் ஒரு பிராண்டாக மாறியது புஷ்பா திரைப்படம்.

இதனிடையே இப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.  அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இரண்டாம் பாகம் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.  இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் டீசரை வருகிற ஏப்.8-ம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags :
Advertisement