For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

09:35 AM May 19, 2024 IST | Web Editor
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா
Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி.  டான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவனிக்கப்படும் இயக்குனரானார் சிபி சக்ரவர்த்தி.  இதையடுத்து அவர் ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோரிடம் கதை சொன்னதாகவும், ஆனால் அவர்கள் இரண்டு பேருக்குமே அந்த கதை பிடிக்காததால் அந்த படங்கள் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  எஸ்கே-24 படமாக உருவாகும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சுகன் தயாரிக்க உள்ளாராம்.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.   இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக  தகவல் வெளியாகியுள்ளது.   இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

Tags :
Advertisement