#BikewithCarDNA | கார் சார்ஜிங் நிலையங்களில் சார்ஜ் செய்யும் வகையில் அறிமுகமான Raptee.HV மோட்டார் சைக்கிள்!
Raptee.HV நிறுவனம் இந்தியாவின் முதல் HV தொழில்நுட்பத்துடன் கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் T-30 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதை கார் சார்ஜிங் நிலையங்களிலும் சார்ஜ் செய்யலாம்.
Raptee.HV நிறுவனத்தின் மோட்டார் சைக்கிளின் சிறப்புகள் குறித்து தற்போது பார்க்கலாம்...
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் HV எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் இதுவே ஆகும்.
- கார் சார்ஜிங் நிலையங்களிலும் சார்ஜ் செய்யத் தகுந்த இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம்.
- Raptee.HV வாகனம் 250-300 CC ICE வாகனங்களுக்கு நிகரான செயல்திறனைத் தரக்கூடியது.
- Raptee.HV மோட்டார் சைக்கிள்களின் விலை 250 முதல் 300 CC ICE வாகனங்களுக்கு சமமான விலையில் ரூ.2.39 லட்சமாக விற்கப்படுகிறது.
சென்னையை தலைமை மையமாகக் கொண்ட Raptee.HV என்ற EV Startup நிறுவனம், எலெக்ட்ரிக் கார்களில் உபயோகத்தில் உள்ள HV தொழில்நுட்பத்துடன், இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த HV தொழில்நுட்பத்தின் மூலமாக Raptee. HV வாகனமானது 250-300CC ICE வாகனங்களுக்கு சவாலான செயல்திறனை மிகக் குறைந்த வெப்பத்துடன் அளிக்கிறது.
இந்த HV தொழில்நுட்பத்தின் மூலமாக எலெக்ட்ரிக் கார்களில் உள்ள Universal Charging தரத்துக்கு ஏற்புடையதான இந்தியாவின் முதல் வாகனமாக Raptee.HV வாகனமானது இருக்கிறது. இந்த வாகனங்களில் OBC பொருத்தப்பட்டு வருவதால் இந்தியாவில் உள்ள 13,500 கார் சார்ஜிங் நிலையங்களிலும் சார்ஜ் செய்ய பொருத்தமானதாக அமைகிறது. CCS2 கார் சார்ஜிங் நிலையங்கள் அடுத்த ஒரு ஆண்டில் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.
இந்த வாகனங்கள் 250-300CC ICE மோட்டார் வாகனங்களுக்கு நிகராக ரூ.2.39 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாக இருப்பது மட்டுமல்லாமல் வாகன உபயோக மற்றும் பராமரிப்பு செலவு முதல் நாளிலிருந்தே சேமிப்பாகிறது.
Raptee.HV மோட்டார் சைக்கிள் ஒரே சார்ஜில் 200 கிமீ IDC Est ரேஞ்ச் 150 கிமீ நிஜ வாழ்க்கை ரேஞ்சும் கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல் 0-60 kmph ஐ 3.5 நொடிகளில் தொடுகிறது. Raptee.HV வாகனங்கள், IP67 தரமுள்ள பேட்டரி பொருத்தப்படுவதால் அனைத்து தர, ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு நிலைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. Raptee.HV எலெக்ட்ரிக் கார்களுக்கு நிகரான 8 ஆண்டு அல்லது 80,000 கிமீ வாரன்டியை வழங்கி வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியான ஒரு நீண்ட கால பயனளிக்கும் வகையில் இந்த வாகனம் அமைந்துள்ளது.
இந்த வாகனங்கள் உயர்தரப்பட்ட பயணத்திற்காக முந்திய மென்பொருள் அம்சங்களைக் கொண்டுள்ளது.. Raptee.HV இல் உருவாக்கப்பட்ட மின்னணுபாகங்கள் மூலமாக Automotive grade Linux platform- இல் உள்ள OS, மிகச் சிறந்த user experience ஐ கொடுக்கிறது.. Raptee.HV மோட்டார் சைக்கிள்கள் கவர்ச்சிகரமான 4 வண்ணங்களில் ஹாரிசன் ரெட் (Horizon Red), ஆர்க்டிக் ஒயிட் (Arctic white), மெர்குரி கிரே (Mercury Grey) மற்றும் எக்லிப்ஸ் பிளாக் (Eclipse Black) வருகிறது.
சென்னை மற்றும் பெங்களூரில், ஜனவரி முதல் விநியோகத்தைத் தொடங்கும் இந்நிறுவனம், premium இருசக்கர வாகனம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனத்தின் விற்பனையை அடிப்படையாகக் கொண்டுகுறிப்பிட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தங்களது தலைமை அலுவலகத்தில் தொழிற்சாலையோடு இணைந்த Experience Center, "Tech store.HVஐ தொடங்கவுள்ளது. இங்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் வாகனம் தயாரிப்பதை பார்வையிடுவது மட்டுமல்லாமல் ஒரு முழுமையான அனுபவத்தையும் பெறமுடியும்.
பாரம்பரியமான முறையில் உள்ள கட்டமைப்பு மட்டுமல்லாமல் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நேரடியான சேவையை அறிமுகப்படுத்தி தரமான அனுபவத்தையும் கொடுக்க முயலுகின்றது.
Raptee.HV இணை நிறுவனர், CEO தினேஷ் அர்ஜுன்
Raptee.HV இன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் அர்ஜுன் கூறுகையில், “எங்களின் நோக்கம் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் வாகனம் உருவாக்குவது மட்டும் அல்ல, மாற்றாக இருசக்கர வாகன அனுபவத்தை முன்னோடி தொழில்நுட்பத்தின் மூலமாக மேம்படுத்துவதாகும். நாங்கள் எலெக்ட்ரிக் கார்களில் உள்ள முந்திய தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களுக்காக வடிவமைத்துள்ளோம்.
இந்தியாவில் HV எலெக்ட்ரிக்வாகனத்தை அறிமுகப்படுத்துவது தொழில்நுட்ப சவாலாகவே இருந்து வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எங்களது திறமையானஅணி இதற்கான முழு வடிவமைப்பை தொடக்கம் முதலே கட்டமைத்து HV தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களுக்கு சாத்தியப்படுத்தியுள்ளனர்.
எங்களது இந்த வெற்றி ஒரு சரியான தொலைநோக்கு பார்வையுடனும் புதுமை நோக்குடனும் எவ்வளவு உயரங்களை எட்ட முடியும், சாதிக்க முடியும் என்பதற்கான அடையாளம்.. இந்த HV தொழில்நுட்பம் இருசக்கர வாகனத்தின் தயாரிப்பை புரட்சிகரப்படுத்தவும் இது முக்கியமான தொழில்நுட்பமாகும் என்று உறுதியாக நம்புகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Raptee. HV-ன் CBO ஜெயப்பிரதீப் வாசுதேவன்
இதுகுறித்து Raptee. HV இன் CBO ஜெயப்பிரதீப் வாசுதேவன் கூறுகையில், “எங்கள் முதல் வாகனத்தை அறிமுகப்படுத்தி இருசக்கர வாகன சந்தையில் புதிய தரத்தை நிலைபடுத்தியுள்ளது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் மோட்டார் சைக்கிள் சந்தை, ஸ்கூட்டர் சந்தையை விட, இருமடங்காக இருப்பதும் மோட்டார் சைக்கிள் பிரிவில் EV வாகனத்தின் பங்கு மிக குறைவாக இருப்பதும் ஒரு பெரிய வாய்ப்பாக கருதுகிறோம். எங்கள் வாகனங்களின் உயர்தரத்துக்கு நிகரான வாடிக்கையாளர்களின் சேவை அனுபவத்தையும் வழங்குவதில் உறுதியாக உள்ளோம்.
இன்றைய சூழலில், ஆட்டோமொபைல்கள், குறிப்பாக மின்சார வாகனங்கள் மின்னணு மற்றும் மென்பொருள் சார்ந்ததாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு எங்களுடைய வாடிக்கையாளர் சேவைகளுக்கான யுத்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மற்றும் வாடிக்கையாளர் நேரடி சேவை மூலமாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்றதொரு அனுபவத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
எங்களது விற்பனை நிலையங்கள் சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் தொடங்கி ஒவ்வொரு கட்டமாக மற்ற நகரங்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் அடுத்த சில ஆண்டுகளில் சரியான நேரத்தில் விரிவாக்கம் செய்யப்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம். நாங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக உயர்வதற்கான தெளிவான யுத்திகளை வடிவமைத்துள்ளோம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Raptee. HV பற்றி
Raptee. HV என்பது 2019-ம் ஆண்டில் தினேஷ் அர்ஜுன், இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (முன்னாள் டெஸ்லா) மற்றும் மூன்று இணை நிறுவனர்களுடன் இணைந்து இருசக்கர வாகன சந்தையில் மின்மயமாக்குதலை துரிதபடுத்துவதற்கு தொடங்கப்பட்ட ஒரு Startup நிறுவனம். இந்நிறுவனம் ICE வாடிக்கையாளர்களுக்கு ஒரு உயர்தர வாகன ஓட்டுதல் அனுபவத்தை சமரசம் இல்லாத ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மூலமாக வழங்குவதற்ககு முயற்சிக்கிறது. சென்னை மணப்பாக்கத்தை தலைமையகமாகக் கொண்ட Raptee.HV நிறுவனம், HV தொழில்நுட்பத்துடன் கூடிய கார் சார்ஜிங் நிலையங்களுக்குப் பொருத்தமான OBC பொருத்தபட்ட ஒரே வாகனத்தயாரிப்பு நிறுவனம் என்பதில் பெருமை கொள்கிறது.
Raptee.HV புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற மோட்டார் சைக்கிள் அனுபவத்தை வழங்குவதற்காக முந்திய செயல்திறன் மற்றும் முந்திய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.. Raptee.HV இருசக்கர வாகன மின்மயமாக்குதலை குறிக்கோளாக கொண்ட 120 தொழிலாளர்களால் இயக்கப்படுகிறது. Raptee.HV வாகனங்கள் 100% மின்னணு பாகங்களையும் மிக முக்கியமான PCB's உள்ளடக்கிய மின்னணு பாகங்களையும் தயாரித்து 94 காப்புரிமை தாக்கல் செய்த ஒரே நிறுவனம் என்ற தனித்துவம் பெறுகிறது. மத்திய அமைச்சகத்தின் கீழ் வரும் ARAI எனும் ஆய்வு நிறுவனத்திலிருந்து 3.27 கோடி ரூபாய் மதிப்புள்ள மானியங்களைப் பெற்றுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மையமாக கொண்டு இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த தயாராகி வருகிறது.