என்னது பருப்புக் குழம்பில் தங்கமா? துபாயை கலக்கும் புதிய உணவு!
துபாய் உணவகத்தில் விற்பனை செய்யப்படும் ஒரு உணவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளோடு வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் சமையல் துறையிலும் தற்போதைய தலைமுறையினரின் சுவை உணர்வுக்கு ஏற்ப பல புதுமையான உணவு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. வித்தியாசமான சுவையிலும், கண் கவரும் நிறத்திலும், பல உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நாள் தோறும் இட்லி. தோசை, பூரி, சாம்பார், ராசம் போன்ற ஓரே மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டு, ஒரு புதுமையான உணவை அனைவரும் தேடுவது வழக்கம்.
இதையும் படியுங்கள் : புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம்! இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
பொதுவாக பருப்பு குழம்பு செய்யும் போது அதில் காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றைச் சேர்த்து தயார் செய்வார்கள். ஆனால், துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் தயாராகும் சிறப்பு பருப்பு குழம்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அப்படி என்ன சிறப்பு இருக்கும்?
புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார், வித்தியாசமான உணவுகளை தயார் செய்வதில் பெயர் பெற்றவர். இவர் துபாயில் நடத்தி வரும் உணவகத்தில் சிறப்பு உணவாக 'தால் கஷ்கான்' என்ற பெயரில் சிறப்பான பருப்பு குழம்பை தயாரித்து வழங்குகிறார். இதையடுத்து, இந்த பருப்பு குழம்பு ஒரு மரப்பெட்டியில் பத்திரமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இவ்வளவு பாதுகாப்பாக இதனை கொண்டு வர காரணம், இந்த பருப்பு கரைசலில் 24 கேரட் தங்க பவுடரை கலந்துள்ளனர். இதற்கு பெயர் "தால் கஷ்கான்". இதனை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்னே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து மற்றும் நெய் கலந்து பரிமாறப்படுகிறது. இந்த சிறப்பு உணவின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,300 ஆகும்.
துபாய் ஃபெஸ்டிவ் சிட்டி மாலில் இந்த சிறப்பான தால் கஷ்கான் பரிமாறப்படுகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான லைக்ஸைகளையும் கமெண்ட்டுகளையும் குவித்திருக்கிறது.